நாணயக் கொள்கைச் சபையானது நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகப் பரிசீலனையிற் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.
தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவுமென சபை கருதுகின்றது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது 2025 ஆகஸ்ட் இல் நேர்க்கணியத்திற்குத் திரும்பலடைந்ததுடன், பதினொரு மாதமாக நிலவிய பணச்சுருக்கம் முடிவுற்றது.














