-பா.சதீஸ்-
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பரல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்றையதினம் காலை தேவிபுரம் ‘ஆ’ பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரின் வருகையை அறிந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















