புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக்க பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ரசிக்க பீரிஸ் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்கு நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு உதவித் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவர் 27 ஆண்டுகள் உதவித் தேர்தல் ஆணையாளராகவும், துணைத் தேர்தல் ஆணையாளராகவும், மேலதிக தேர்தல் ஆணையாளராகவும் தொடர்ச்சியாகப் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் அவர் சேவையில் மிகவும் மூத்த அதிகாரிகளில் ஒருவராகவும் திகழ்கிறார்.
முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அக்டோபர் மாதம் 13 ஆம் திகதியோடு 60 வயதை அடைந்ததிலிருந்து இந்தப் பதவி வெற்றிடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


















