இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். .
இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்தப் பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
சமுதிகா ஜயரத்ன, வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவராவார்.


















