இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் சிகிச்சை முகாம் கடந்த 26 ஆம் திகதி வெயாங்கொடை சிறிசுமன அறநெறிப் பாடசாலையில் நடைபெற்றது.
கடற்படை பல் மருத்துவத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பல் சிகிச்சை வெயாங்கொடை சிறி சுமன அறநெறிப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்தப் பல் சிகிச்சையில் அறநெறிப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இலவச பல் பரிசோதனைகள் மற்றும் சுத்தம் செய்தல், வாய்வழி சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

















