தெற்கு கடற்கரையில் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொதிகள் நீரில் மிதந்து வந்துள்ளன. மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


















