இலங்கைக்கு கடல்வழியாக கடத்திவரப்பட்ட சுமார் 96 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கடந்த 15 மாதங்களில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், 2025ம் ஆண்டில், ஹெரோயின், ஜஸ், கொக்கைன் ஆகிய 3 வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் 71 பில்லியன் ரூபாய் எனவும் கூறியுள்ளார்.
2026ம் ஆண்டு மார் 25ம் திகதி வரையில், சுமார் 25 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தமாக 15 மாதங்களில் சுமார் 96 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், 2026ம் ஆண்டில் 9 பலநாள் மீன்பிடி படகுகள் மற்றும் 49 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டில் 13 பலநாள் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல் போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய 123 படகுகள் இதுவரை கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கடற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக்கப்படும் எனவும். கடத்தல் நடவடிக்கைகள் இனிமேல் சாத்தியமில்லை எனவும் கடற்படை பேச்சாளர் மேலும் கூறினார்.


















