ஊவா பரனகம யாழகமுவ பகுதியில் கட்டுத் துப்பாக்கியொன்று வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் இடமேகம, அம்பகஸ்தோவ, ஊவா பரனகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா பரனகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் குழுவினர் யாழகமுவ வனப்பகுதிக்கு சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொள்வதற்காக சென்ற வேளையில் மிருகங்களை வேட்டையாட கட்டப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
சம்பவத்தில் கான்ஸ்டபிளின் இடது முழங்காலில் காயமேற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைகளுக்காக வெலிமடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.


















