இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவை வழங்குவதற்காக, இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட, இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகொப்டர்கள் அத்தியாவசிய தேவை காரணமாக மீண்டும் இந்தியா நோக்கி இன்று பயணமாகியது.
இதனையடுத்து, இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அனர்த்த நிவாரண சேவைக்காக இந்த ஹெலிகொப்டரில் 14 இந்திய வீரர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















