-12 பேர் வைத்தியசாலையில்-
திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்றுக் காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருகோணமலை நோக்கிப் பயணித்த குறித்த சொகுசு பேருந்து, நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் மஹிந்தபுர சந்திக்கு அருகில் சென்றபோது விபத்துக்குள்ளாகியது.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்த 9 பேர் மூதூர் தள வைத்தியசாலையிலும் 3 பேர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருவம் எவருக்கும் பாரிய உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


















