அகலவத்தை, தெல்பாவத்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை கணவனின் தாக்குதலில் அவரது மனைவி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெல்பாவத்த, மககம பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் என குறிப்பிடப்படுகின்றது.
குடும்பத் தகராறு காரணமாக, கணவர் கதவு தாழ்ப்பாளால் தாக்கியதில் இந்தக் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உயிரிழந்த வயோதிப பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 84 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


















