கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பார்வைக் குறைபாடுள்ள இலங்கையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் கலந்துகொண்டார்.
இதன்போது, கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்து சென்றார்.
‘நான் துணியால் கண்களை கட்டிக்கொண்டுள்ளேன், கண்பார்வை இல்லாமல் நடப்பது எப்படியிருக்கும் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்’ என கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவித்தார்.


















