அரசாங்க வைத்தியசாலைகளில் கண்புரை சத்திரசிகிச்சைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு, 35 வகையான லென்ஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தங்கள் கண்டி ஜயசூரிய அசோசியேட்ஸ் மற்றும் கொழும்பு எல்ஷதாய் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்க, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
–


















