நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் கனடாவில் இடம்பெற்ற மாவிலி வசந்தம் 2025 கலைவிழா நிகழ்வும், நூல் வெளியீடும் இம்மாதம் 11 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புலம்பெயர் உறவுகளின் பிள்ளைகளால் தமிழரின் பாரம்பரியக் கலைகள் அரங்கேற்றப்பட்டு, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.
ஐந்து ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற மாவிலி வசந்தம் கலை விழாவுக்கு புலம்பெயர் தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் நெடுந்தீவு மக்களின் வரலாறுகளை ஆவணப்படுத்தும் ‘மாவிலி வசந்தம்’ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கனடா ரொறோன்ரொவில் அமையவிருக்கும் தமிழ் சமூக மையத்துக்கான கட்டிட நிதிக்கான பங்களிப்பாக பத்தாயிரம் டொலர்கள் உரிய தரப்பினரிடம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















