மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் உள்ள நீரேந்து பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் பலத்த மழை மற்றும் அடர்ந்த மூடுபனி பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அட்டன் – நுவரெலியா மற்றும் அட்டன் – கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் பக்கவாட்டு வீதிகளில் இந்த அடர்ந்த மூடுபனி நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது, வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாகவும், கவனமாகவும் வாகனத்தினை செலுத்துமாறு சாரதிகளை அட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கேட்டுள்ளது.

















