மன்னார் காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராகவும், இல்மனைட் அகழ்வுக்கு எதிராகவும் 14ம் நாளாக நேற்று மன்னார் மக்கள் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
நேற்றைய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்குபற்றி போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். நேற்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல்
மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


















