தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அமைச்சுக்கு முன்பாக பெற்றோர் குழுவொன்று தொடர்ச்சியான அமைதி போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈடுபட்டனர்.
தரம் 06 பெற்றோர் சங்கம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி, பொலன்னறுவை, காலி உள்ளிட்ட பல பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், புதிய கல்வி சீர்திருத்தச் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் குறித்து பெற்றோர்கள் சரியான புரிதல் இல்லாமல் போராட்டம் நடத்தி வருவதாக அதிபர் தர சங்கத்தின் செயலாளர் நிமல் முதுங்கொடுவ தெரிவித்தார்.
இந்தக் கல்வி சீர்திருத்தச் செயல்பாட்டில் காணப்படும் சிக்கல்களை சரிசெய்து புதிய திருத்தங்கள் மூலம் முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பந்னசேகர தேரர் தெரிவித்தார்.
அதேநேரம், உரிய கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டுவர வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட தீப்பந்தப் போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ருவன்வெல்ல கன்னத்தொட்டை பகுதியில் நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு வந்த ஒரு குழுவினர் போராட்டக்காரர்களைத் தடுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


















