-பா.சதீஸ்-
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் சி4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய இளைஞரொருவர் அதிரடிப்படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
கள்ளப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்த இளைஞர் கைதானதாகவும் கைதானவரிடமிருந்து சுமார் 2 கிலோ 700 கிராம் அளவுடைய சி4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















