தியதலாவ – வெலன்ஹின்ன பகுதியில் காட்டுத் தீப்பரவலில் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
இந்தத் தீ விபத்து நேற்று திங்கட்கிழமை ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தியதலாவப் பகுதியில் உள்ள வனப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
















