2025 ஆம் ஆண்டிற்கான காணி ஆணையர் நாயகம் திணைக்களத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு மற்றும் இவ்வாண்டுக்கான இலக்குகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்ட நிலையில்,காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் காணிப் பிரச்சினைகள் உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு பெரும் காரணமாக அமைகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், காணிப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
















