காணிப் பிரச்சினையால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை பொல்லால் தாக்கி கொலை செய்தார்.
இச்சம்பவம் எல்பிட்டிய படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. காணியை அளவிடுவதற்காக நில அளவையாளர்கள் வந்து அளவீட்டுப் பணிகளை முடித்துச் சென்றதன் பின்னரே, காணி தொடர்பில் இருவருக்கும் இடையில் இந்த வாய்த்தர்க்கம் ஆரம்பமாகியுள்ளது. பின்னர் உயிரிழந்தவர் மீது பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் கீழே விழுந்தார்.
அதன் பின்னர் குடும்பத்தினர் இணைந்து அவரை உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 73 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
இச்சம்பவம் தொடர்பான சந்தேகநபரைக் கைது செய்வதற்காக எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


















