மன்னார் – பள்ளிமுனை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று தொடர்பான பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைவாக, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நேற்று மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின்போது குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்த தன் அடிப்படையிலும் அழுகிய பழங்கள், மரக்கறிகள் விற்பனைக்காக வைத்திருந்த தன் அடிப்படையிலும், களஞ்சியசாலை சுகாதாரமான முறையின் பேணப்படமையின் அடிப்படையிலும் விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டு அழிக்கப்பட உள்ளதுடன் விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டது.


















