அக்மீமன – பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.
பனாகமுவ பகுதியில், பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த இருவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















