காலி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த கைதி தவறி கிணற்றில் விழுந்தார்.
உயிரிழந்தவர் அக்மீமன, கொனமுல்ல பிரதேசத்தில் 22 வயதுடைய கைதி ஆவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ம் திகதி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென கிணற்றில் தவறி விழுந்தார்.
இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் சிலர் இணைந்து கிணற்றில் விழுந்த கைதியை காப்பாற்றி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றியதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















