மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புகொல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில், சடலம் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மகுலுகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















