தோல்விக்குப் பிறகு உடை மாற்றும் அறைக்கு சென்ற பாகிஸ்தான் வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே வர மறுத்தனர். இதனால் மைதானத்தில் ஒருவிதமான குழப்ப நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே பரிசளிப்பு நிகழ்வு தாமதமாகியது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான நக்வி காசோலை மாதிரியை வழங்கினார். ஆனால், அடுத்த நொடியே மேடை நாகரீகம் என்பது இன்றி, இறுக்கமான முகத்துடன் கோபத்தில் இருந்த சல்மான் அந்த காசோலை மாதிரியை தூக்கி வீசினார். இதனை கண்ட மேடையிலிருந்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே போன்று இந்தியாவை விமர்சிக்கும் பாகிஸ்தான் அமைச்சர் நக்வியிடமிருந்து கிண்ணத்தை வாங்க மாட்டோம் என இந்திய வீரர்கள் கிண்ணம் இல்லாமல் தமது வெற்றியைக் கொண்டாடினர். அதே வேளை இந்திய அணி வெற்றி பெற்றதும் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் ‘விளையாட்டுக் களத்திலும் ஆபரேஷன் சிந்தூர். முடிவு ஒன்றுதான், இந்தியா வென்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


















