-பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை-
கிவ்.ஆர் முறைமையினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதை இலக்கு வைத்து சில தரப்பினர் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தகவல் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இணையத்தளத்தைத் தவிர வேறு எந்தவொரு தளத்திற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மோசடி செய்பவர்கள் இவ்வாறு தகவல்களைத் திரட்டி போலி கியூ.ஆர் குறியீடுகளைத் தயாரிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக உண்மையான உரிமையாளர்களுக்குத் தமது கியூ.ஆர் குறியீடுகளை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.


















