கொட்டுகொ பகுதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக கொட்டுகொட கிரிட் துணை மின் நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.
முலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக முழு உபநிலைய வளாகமும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டது. நேற்றுமுன்தினம் மாலையாகும்போது நீர்மட்டமானது கட்டுப்பாட்டுப் பலகை மட்டத்தை அடைந்துள்ளதால், நிலைமை பாதுகாப்பான செயற்பாட்டு வரம்புகளை மீறியுள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டிக்கத் தீர்மானித்ததாக இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















