கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.
அந்தப் பகுதியில் நேற்றைய தினம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று, அதில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை அங்கிருந்து அகற்றுவதற்குரிய நீதிமன்றத்தின் உத்தரவினை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
















