நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்திற்கு ஆதரவாக பொலன்னறுவைப் பகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்தத் திட்டங்களுக்கான முக்கிய நிதிப் பங்களிப்பு மற்றும் அனுசரணையை தொழிலதிபரும் அரலிய குழும நிறுவனங்களின் தலைவருமான டட்லி சிறிசேன வழங்கியுள்ளார்.
அதன்படி, பொலன்னறுவை, ஹதமுன சந்திப்பில் உள்ள நீர் கோபுரத்தை நவீனமயமாக்குதல் மற்றும் ‘கனவு இலக்கு’ திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் ஆரம்ப விழா நேற்று நடைபெற்றது.
இந்தத் திட்டங்கள் பொலன்னறுவைக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், பிரதேச மக்களுக்கும் உயர் மட்ட சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தத் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கிய அரலிய குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேனவும் இந்த ஆரம்ப விழாவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


















