மேற்கு மாகாணத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்கில், பொதுமக்களுக்குத் தகவல் அளிப்பதற்காகப் புதிய 24 மணி நேர வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது மேற்கு மாகாணத்தில் நிகழும் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை, மேற்கு மாகாணத்தின் சிரேஷ்ட டி.ஐ.ஜி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைப் பிரிவிற்கு 0777128128 என்ற வாட்ஸ்அப் தொலைபேசி எண் வழியாக வழங்க முடியும்.
தகவல் அளிக்கும் நபர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.


















