இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் குழந்தைப் பருவ புற்று நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கவும் உலக சுகாதார நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் இது சம்பந்தமான ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புற்று நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை தொடர்ச்சியாக விநியோக உறுதி செய்வதாகவும் அறிவித்துள்ளது.


















