-தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு-
கண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றது.
சந்தேக நபரிடம் 85 கிராம் 260 மில்லி கிராம் ஹாஷிஷ் மற்றும் 11 கிராம் 210 மில்லி கிராம் குஷ் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹோகந்தரவைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் ஐந்து நாள் தடுப்புக்காவல் உத்தரவை நீதிமன்று வழங்கியுள்ளது.


















