கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த இளைஞர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (12) இரவு மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம, ரயில் வீதிப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


















