கொழும்பு மாநகர சபைக்கு சேவையைப் பெற வரும் மக்களுக்கு சரியான வழிக்காட்டல் அவசியம் என வட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
கொழும்பு மாநகர சபை என்பது பிறப்பு முதல் இறப்பு வரையிலான சேவைகளை வழங்குகின்ற ஒரு நிறுவனமாகும்.
அதன் மூலம் கொழும்பு நகரத்திற்கு வருகின்ற 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றது.
இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பிரிவுகளுக்கு மக்கள் அனுப்பப்படும் போது சரியான ஒரு வழிக்காட்டல் இல்லாத காரணத்தினால் அவர்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
நகர மண்டப வளாகத்தில் சபைக்கு சொந்தமான இரண்டு கட்டிடங்கள் காணப்படுவதுடன், அக் கட்டிடங்களுக்குள் அமையப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பிரிவுகளுக்கு அனுப்பப்படுவதற்கு சரியான ஒரு வழிக்காட்டலைச் செய்யுமாறு சபையில் பிரேரித்திருந்தேன் என்றார்.
















