நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தவறினால் மைத்திரி, கோத்தாபய ஆட்சிகள் கவிழ்ந்ததைப் போன்று, அநுர ஆட்சியும் கவிழ்வதை எவராலும் தடுக்க முடியாது போகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது, இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாங்கள் இந்த நாட்டில் வாழ முடியும். நாடு வளமாக இருக்க வேண்டுமாயின் இதுபோன்ற அனர்த்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த நேரத்தில் சில விடயங்களை குறிப்பிட வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஆட்சி இல்லாமல் போனது. உர விடயத்திலேயே கோத்தாபய ராஜபக்ஸவின் ஆட்சி இல்லாமல் போனது. ஆனால் அநுரவின் ஆட்சி இந்த அனர்தத்தினால் இல்லாமல் போகக்கூடாது என்பதனை கூறிக்கொள்கின்றோம். அவ்வாறு போனால் எங்களால் காப்பாற்றவும் முடியாது. இதனால் அனர்த்த விடயத்திலும் நீங்கள் முழுமையான வேலைகளை செய்யாவிட்டால் உங்களுக்கும் இதே நிலைமை ஏற்படும் என்றார்.


















