சந்நிதியான் ஆச்சிரமம் – செல்வச்சந்நிதி யாழ்ப்பாணம் ஆலயத்தின் முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளினால் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பல கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வு பி.பத்மராஜன்JP இன் வேண்டுகோளுக்கிணங்க நடைப்பெற்றது.
மொத்தம் ஐந்து கோவில்களும், கண்டி மாவட்டம் பஸ்பாகே கோரளை பிரதேசம் சார்ந்த இரண்டு ஆலயங்களும் இந்நிதி வழங்கலின் கீழ் நடைபெற்றன.
வழங்கப்பட்ட நிதி விவரம் :
குயிடஸ்பெரி மேற் பிரிவு – ரூ. 100,000
தலபத்தனை Goபிரிவு – ரூ. 100,000
தும்பகஸ்தலாவை பிரிவு – ரூ. 100,000
போகில் கீழ்பிரிவு – ரூ. 100,000
கெட்டபுலா நடுப்பிரிவு – ரூ. 25,000 (வரணபூச்சி)
தொங்க தோட்டம் – ரூ. 100,000
வெஸ்டோல் ரிலாகல – ரூ. 100,000
அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று நிதி வழங்கிய சுவாமிகள், கோவில் பரிபாலனச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என வாழ்த்தி, பக்தர்களின் ஒத்துழைப்பையும் பாராட்டினார்.


















