அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இன்று செவ்வாய்க்கிழமை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிவித்தார்.


















