2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் அனைத்து விதமான விளம்பர நடவடிக்கைகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் தமக்கு அருகிலுள்ள காவல்துறை நிலையத்திலோ, 119 என்ற காவல்துறையின் அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாகவோ வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















