பத்தரமுல்லை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இதுவரை நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்களும் அடங்குவதாக தெரியவந்தது.
தற்போது கைதாகியுள்ள நால்வர் மீதும், இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் கொண்டுச் சென்று துப்பாக்கிதாரிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூந்து ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
இந்த இரட்டைக்கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தினர்.


















