-கஜிந்தன்-
வடமராட்சி கிழக்கு, தாளையடிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டிப்பரொன்றை கைப்பற்றிய மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பில் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துக்கல தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதியில் நேற்றிரவு முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பின் போதே மண்ணுடன் டிப்பரை கைப்பற்றியதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த டிப்பரில் பல ஆண்டுகளாக இரவு பகலாக மணல் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


















