கடவத்தையில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்தது.
லேபிள் விதிமுறைகளை மீறி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் பதிவு இலக்கத்தை குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்த பின்னர், அந்த வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைப்பற்றப்பட்ட சுமார் 5 இலட்டசம் மதிப்புள்ள வால்வுகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் லேபிளிங் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்த பின்னர், மஹர நீதவான் நீதிமன்றம் அவற்றை அழிக்க உத்தரவிட்டது.
அதன்படி, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் பதிவு இலக்கம் குறிப்பிடாமல் மிதக்கும் பந்து வால்வுகளை விற்பனை செய்தமைக்காக கடவத்தை எல்தெனிய பகுதியில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
தரக்கட்டளை நிறுவனத்தின் பதிவு இலக்கம் குறிப்பிடப்படாத வால்வுகளை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹார்ட்வேர் நிறுவனம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















