சத்துருக்கொண்டான் கும்பலமடு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை வெடிகுண்டு போன்ற சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்துருக்கொண்டானைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அளித்ததையடுத்து, கொக்குவில் பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டு போன்ற பொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக் கடமைக்காக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

















