சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்ததையடுத்து நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது தீப்பரவல் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தீயணைப்புத் திணைக்களத்தின் 07 தீயணைப்பு வாகனங்கள் உட்பட பல தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


















