தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி (நேற்று) அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.


















