கொலன்னாவை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ படகுமூலம் சமைத்த உணவு மற்றும் நீரை எடுத்தச் சென்று வழங்கியுள்ளார்.
சஜித் பிரேமதாச நேற்று காலை கொலன்னாவை பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்திற்கு மத்தியில் படகு தேவை எடுத்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகலாகும்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலையீட்டின் மூலம் கொல ன்னாவை பிரதேசத்திற்கு இரண்டு படகுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
அவ்வாறு வழங்கி வைக்கப்பட்ட இரண்டு படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் குடிநீர் வசதிகளை நேரில் சென்று வழங்கிவைத்தார்.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு எடுத்துச் செல்ல சமைத்த உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஏற்பாடு செய்திருந்தார்.


















