மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்ககூடாதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் கருத்து வெளியிடுகையில்:
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பாராட்டுகின்றோம்.
அவர்களுக்கு 50 ரூபா சம்பளம் வழங்குவதற்குகூட கடந்த கால அரசாங்கம் முடியாது எனக் கூறிவிட்டது.ஆனால் தற்போது அரசாங்க தரப்பில் 200 ரூபா வழங்கப்படுகின்றது. கம்பனி தரப்பில் இருந்து 200 ரூபா வழங்கப்படுகின்றது. மொத்தம் தொழிலாளர்களுக்கு 400 ரூபா கிடைக்கப்பெறவுள்ளது.
இவ்வாறான நிலையில்,சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்ககூடாது என்றார்.


















