-டக்ளஸ் தேவானந்தா-
சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளிர் அணியினர்.
அந்த நெஞ்சுரமும் மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும் தொடர்ந்தும் புத்துணர்வுடன் முன்னெடுக்கப்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்றதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடலொன்று சனிக்கிழமை யாழ்.நகரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.இதில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களுக்கான ஓர் அரசியல் அமைப்பில் பெண்களின் பங்கு அவசியமானது என்பது எனது திடமான நம்பிக்கை.
அதனடிப்படையிலேயே, ஆயுதப் போராட்ட காலத்திலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கியிருந்தேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

















