-அரசின் நிகழ்ச்சிநிரல் வெற்றிபெறாது என்கிறார் நாமல்-
பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெறாது என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பொலிஸ் மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த காரியாலயத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுகிறார். பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது என்றார்.


















