ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (6) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த காரணிகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

















